ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆன் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சிமர்ஜீத் சிங் நாக்ரா, அஸி பாக்ரியா, மன்ஹர் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஜவான் படத்திற்கான ட்ரைலர் , மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அந்த அளவிற்கு ஹிட் ஆக கூடிய அளவில் அனிருத் நல்ல பாடலை கொடுத்து இருந்தார். இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் வைத்து நடத்தினால் கண்டிப்பாக ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக வரும் என்பதற்காக படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை இங்கு நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் படத்தின் இசைவெளியீட்டு விழா அங்கு நடைபெறும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜவான் திரைப்படத்தில் இருந்து இன்னும் ஒரு வெறித்தனமான ட்ரைலர் வெளியாகவுள்ளது. அதையும் படம் வெளியாவதற்கு முன்பு படக்குழு வெளியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.