நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது.
பிறகு சிஜி வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறும் எனபதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இனிமேல் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு திருவிழாவாக அமைய போகிறது.
முன்னதாக, படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. அந்த வகையில், இந்த அயலான் திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், ஷரத் கேல்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையில், ரஜினி நடிக்கும் “தலைவர் 171” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…
தற்போது, அந்த தகவல் உறுதியாகிவிட்டது. ஆம், சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவான ரஜினியுடன் நடிக்க காத்திருந்த நிலையில், தலைவர் 171 அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார் என்று நம்பகமான சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…