நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. லாபம் திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார் என்றே கூறலாம். குறிப்பாக அவருக்கு தமிழை விட தெலுங்கு மற்ற மொழிகளில் தான் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்று கூட கூறலாம்.
தமிழில் பட வாய்ப்புகள் வராதது குறித்து பேட்டி ஒன்றில் கூட ஸ்ருதிஹாசன் “நான் வேணுமென்றே தமிழில் நடிக்க கூடாது என்று எல்லாம் இல்லை எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்று மனம் திறந்து பேசவும் செய்திருந்தார். இந்த நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின்பு மீண்டும் தமிழில் ஸ்ருதிஹாசனுக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரெய்டு, வீரா. ராக்ஷசுடு, ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா அடுத்ததாக ராகவா லாரன்ஸை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் பேனரில் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஏற்கனவே ஒரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், அடுத்ததாக தற்போது ஸ்ருதிஹாசனிடம் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…