ஹைதராபாத் : சூர்யா நடித்து வரும் கங்குவா படம் பல சாதனைகளை முறியடித்து புது சாதனைகளை படைக்கும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் நிச்சியமாக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவே பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தங்கலான் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்டபோது பேசிய விக்ரம்” மொத்தமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு 3 தொடர் பிளாக் பஸ்டர் படங்கள் அமையப்போகிறது. முதலில் ‘தங்கலான்’, அதற்கு அடுத்ததாக ‘கங்குவா’, பின் கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ என மூன்று படங்கள் தொடர் வெற்றியை அவருக்கு கொடுக்கும்” என பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய விக்ரம்” சூர்யாவின் கங்குவா படம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர் ” சூர்யாவின் கங்குவா படம் நிச்சியமாக பெரிய வெற்றி படமாக அமையும். வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடிக்கும்” என கூறினார்.
விக்ரம் மேடையில் கங்குவா படத்தை பற்றி பேசியதற்கு முக்கிய காரணமே தங்கலான் படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் கங்குவா படத்தையும் தயாரித்து இருக்கிறார். எனவே, தன்னுடைய படத்தினை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக விக்ரம் பேசினார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…