விஜயகாந்த் ரொம்பவே விரும்பி சாப்பிட்டது எது எல்லாம் தெரியுமா?

Vijayakanth

விஜயகாந்த் : பள்ளி பருவத்தில் இருந்து விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் அதிகமாக செய்த உதவிகளில் ஒன்று சாப்பாடு போட்டு மற்றவர்களின் பசியை போக்கியது தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல மக்களுக்கும், தன்னுடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்களும், தன்னுடன் பயணித்தவர்கள் என பலருக்கும் சாப்பாடு போட்டு இருக்கிறார். அப்படி பலருடைய பசியை தீர்த்த விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம்ம கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் குழந்தை போலவே தனக்கு பிடித்த உணவுகளை பற்றி பேட்டியில் பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் பேசிய விஜயகாநத் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே கடலைமிட்டாய் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதைப்போலவே மாங்காய் என்றாலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

நான் பள்ளிக்கூடம் படிக்கும்போதில் இருந்து இதனை விரும்பி சாப்பிட்டு வருகிறேன்.  இன்னும் எனக்கு மாங்காய் என்றால் ரொம்பவே பிடிக்கும். மாங்காவை வெறுமனையாக சாப்பிடுவது எனக்கு பிடிக்காது. அதனுடன் உப்பு,  வத்ததூள் ஆகியவற்றை சேர்த்து வைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதைப்போல, அந்த சமயத்தில் விற்கப்பட்ட குச்சி ஐஸும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதைப்போல மதுரையில் விற்கப்படும் ஜிகிர்தண்டா விரும்பி குடிப்பேன்.

மதுரையில் மட்டும் இல்லை எங்கு எல்லாம் ஜிகிர்தண்டா இருக்கிறதோ அங்கு எல்லாம் நான் விரும்பி சென்று குடிப்பேன். இருந்தாலும் நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது குடித்த அளவிற்கு ஜிகிர்தண்டா இப்போது நிறைய கடைகளில் இல்லை என்பது எனக்கு ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம் தான்” எனவும் கேப்டன் விஜயகாந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்