GOAT படம் பார்த்துவிட்டு வருண் சக்கரவர்த்தி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

GOAT படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படம் கமர்ஷியல் பேக்கேஜ் என பாராட்டியுள்ளார்.

Varun Chakaravarthy watch GOAT

சென்னை : விஜயின் கோட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தினை பார்த்த மக்களை பலரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு லியோ படத்தை தொடர்ந்து, இந்த படமும் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களை போலவே, பிரபலங்கள் பலரும் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். குறிப்பாக,  சிவகார்த்திகேயன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோர் முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளித்தனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படத்தை திரையரங்கில் கண்டுகளித்து படத்தை பாராட்டியுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி விஜயின் ஒரு தீவிரமான ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். எந்த அளவுக்கு என்றால் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய கையில் விஜயின் புகைப்படத்தை டாட்டூவாகவே போட்டிருப்பார். அதன் மூலமே அவர் எந்த அளவுக்கு விஜயின் வெறித்தனமான ரசிகர் என்பது தெரியும்.

விஜய் படங்கள் வெளியானால் தவறாமல் பார்க்கும் வருண் சக்கரவர்த்தி இன்று கோட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை சந்தோசமாக கண்டுகளித்தார். படம் முடிந்த பிறகு தனது விமர்சனத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

படம் பார்த்துவிட்டு அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “GOAT திரைப்படம் ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் படம். இந்தப் படத்தை ரசித்து மகிழ்ந்தேன். படத்தின் குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்… படத்தில் நல்ல ஆச்சரியங்கள் இருக்கிறது. எனவே, அனைவரும் தங்களுடைய குடும்பங்களுடன் சென்று கண்டிப்பாக பாருங்கள்!! மட்ட பாடல்…. மனதை வருடும்!” என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்