உதவி கேட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஆர்.ராதா!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கும் பல நடிகர்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் வில்லனாக நடித்து கொண்டு வருவதால் அவர்கள் வில்லன் என்ற பிம்பமே மக்களின் மனதில் பதிந்து விடும். பின், அவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள் என்பதை அவர்களுடன் பணியாற்றிய பிரபலங்கள் தான் பேட்டிகளின் மூலம் மக்களுக்கு தெரிய படுத்துவார்கள்.
அப்படி தான் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி கொண்டு இருந்த எம்.ஆர்.ராதா ரசிகர் ஒருவருக்கு செய்த உதவிய பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர் ஒருவர் அவரை பார்க்க வந்தாராம்.
ஆனால், படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துகொண்டு இருந்ததால் வேகமாக சென்று எம்.ஆர்.ராதாவால் நேரடியாக பேசமுடியவில்லையாம். அந்த ரசிகரும் எம்.ஆர்.ராதா தன்னை பார்க்க வருவார் தன்னிடம் எதாவது பேசுவார் என்று நீண்ட மணி நேரமாக காத்துக்கொண்டே இருந்தாராம். பிறகு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேகமாக அந்த ரசிகரிடம் எம்.ஆர்.ராதா பேசினாராம்.
எம்.ஜி.ஆர் தான் எனக்கு முக்கியம்! இந்தி பட வாய்ப்புகளை உதறி தள்ளிய நடிகை லதா!
அந்த ரசிகர் எம்.ஆர்.ராதாவின் காலை பிடித்துக்கொண்டு ஐயா எனக்கு எதாவது உதவி செய்யுங்கள் என்று கூறினாராம். அதற்கு எம்.ஆர்.ராதா பேசி முதலில் அந்த ரசிகரை வீட்டிற்கு போக சொல்லிவிட்டாராம். பிறகு அதற்க்கு அடுத்த நாள் அந்த ரசிகரின் வீட்டு முகவரி மற்றும் அவரை பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒருவரை விட்டு கேட்டுவிட்டு வர சொன்னாராம். பிறகு கையில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து கொடுத்தாராம்.
பணத்தை எடுத்துக்கொடுத்து இதனை அந்த நபரிடம் கொடுங்கள் என்று கொடுத்து பணம் கொடுத்து உதவி செய்தாராம். கிட்டத்தட்ட அதில் 10,000க்கும் மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஆர்.ராதா 1950 காலகட்டத்தில் தான் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார். அந்த சமயம் 10,000 என்பது மிகவும் பெரிய தொகை ஆனால், பணத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எம்.ஆர்.ராதா அந்த சமயமே உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான ஏவிஎம் ப்ரோ தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025