நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்கள், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவைடந்துள்ளது. ஏற்கனவே படத்தின் அணைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது. அதை இன்றே எடுத்து மொத்தமாக படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.
படப்பிடிப்பு முடிந்ததை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் படக்குழுவினருடன் கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா சமந்தாவிற்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, கம்மலை பரிசாக கொடுத்துள்ளார். அவர் கொடுத்த கம்மலின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது நன்றியை சமந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…