விஸ்வாசம் படத்தை பார்த்து விட்டு செல்லும் போது ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா !!!! உண்மையை கூறிய திரையரங்க உரிமையாளர்கள்!!!
விஸ்வாசம் அஜித் -சிவா கூட்டணியில் உருவான 4-வது படம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை பலரும் குடும்பத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீபாலாஜி சினிமாஸ் திரையரங்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை கூறியிருக்கிறார்கள். அப்போது அவர் கூறுகையில் எங்களது தியேட்டரில் இரண்டாவது நாள் இரவு காட்சி ஒளிபரப்பப்பட்டது.
அப்போது நிறைய ரசிகர்கள் குடும்பம், குடும்பமாக வருகை தந்திருந்தனர். தந்தை மகளின் சென்டிமெண்ட் காட்சிகளை பார்த்து பலரும் கண்கலங்கினர். படத்தின் இறுதி கிளைமேக்ஸ் காட்சிகளை பார்த்து பலரும் அழுது கொண்டே வெளியே சென்றதை பார்த்தோம் என்று கூறியுள்ளார்கள்.