டாடா படம் பார்த்த தனுஷ்…கவின், அபர்ணாவுக்கு போன் செய்து என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Default Image

‘டாடா’ படம் பார்த்து நாயகன் கவினையும் நாயகி அபர்ணா தாஸையும் போனில் அழைத்து தனுஷ் பாராட்டியுள்ளார். 

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின்,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் டாடா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்களும் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

DaDa is a big blockbuster
DaDa is a big blockbuster [Image Source : Google ]

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கமல்ஹாசன் கவினை நேரில் அழைத்து படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ் டாடா திரைப்படத்தை பார்த்துவிட்டு நாயகன் கவினையும் நாயகி அபர்ணா தாஸையும் போனில் அழைத்து  பாராட்டியுள்ளார்.

Dhanush
Dhanush

தனுஷ் போனில் பேசி பாராட்டியதை  கவின் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியீட்டு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  ஹாய் கவின் நான் தனுஷ் பேசுறேன்… டாடா திரைப்படம் அருமையாக இருக்கிறது. அந்த வியப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. தனுஷ் சார் டாடா படத்தை பார்த்துவிட்டு  எனக்கு போன் செய்தது மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. தனுஷ் சார் உங்களுடைய படங்களை, உங்களின் திறமையை நான் திரையரங்குகளில் பார்த்து வியந்திருக்கிறேன்.

எனவே நீங்கள் இன்று என்னுடைய படத்தை பார்த்து விட்டு போனில் அழைத்து பாராட்டியதை நன்றியினால் மட்டுமே ஈடு செய்துவிட முடியாது. எங்களை போல வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டுவதற்காக உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களின் ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துகள்.” என கூறியுள்ளார்.

Vaathi box offfice
Vaathi box offfice [Image Source : Google ]

மேலும், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான வாத்தி திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்