Daniel Balaji: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு 1 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு செய்தி தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் டேனியலின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்தும் பிறர் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளார். தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.
ஆம், அவரின் கண்கள் பார்வையில்லாத ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. உயிருடன் இருக்கும்போதும் முடியாதவர்களுக்கு உதவி செய்த அவர், மறைந்த பிறகும் தனது கண்களை தானமாக வழங்கி பிறரின் வாழ்க்கையில் ஒளிவீச செய்துள்ளார். அவர் மறைந்தும் ஒருவருக்கு கண் தானம் செய்து அனைவரது மனதிலும் வாழ்கிறார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…