பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் அடிக்கடி பைக் ரைடுகளும் தன்னுடன் படத்தில் பணியாற்றும் பிரபலங்களுடன் செல்வதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில், அஜித் பற்றி ஆச்சரியம் கொடுக்கும் வகையில் நம்பவே முடியாத அளவிற்கு ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், அஜித்குமார் பைக் ரைடு செல்லும்போது வழியில் பைக் எங்கையாவது பஞ்சர் ஆகிவிட்டது என்றால் அந்த பைக்கை அப்படியே அங்கையே நிறுத்திவிட்டு யாரு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்று அதே இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றுவிடுவாராம். ஏனென்றால், பஞ்சர் ஆனால் எதோ நேரம் சரியில்லை என்று யோசிப்பாராம்.
எனவே, எப்போது வெளியே சென்றாலும் பைக் திடீரென பஞ்சர் ஆகிவிட்டது என்றால் நிறுத்திவிட்டு சென்றுவிடுவாராம். அப்படி தான் ஒரு முறை விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள பிரபலங்களுடன் இணைந்தது பைக் ரைடு சென்றபோது பைக் பஞ்சர் ஆகியதாம். அப்போது அப்படியே பைக்கை நிறுத்திவிட்டு சென்றாராம்.
உடனடியாக பின்பே வந்த சில பிரபலங்கள் இதை பைக்கை நீங்கள் இப்படியே விட்டு விட்டு போக எங்களிடம் கொடுத்தீர்கள் என்றால் நான் உங்கள் கண்ணில் படாதவாறு வைத்துக்கொள்வேன் என்று கூறினார்களாம். இதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துவிட்டு வைத்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இந்த தகவலை பிரபல சினிமா தகவலை தெரிவிக்கும் யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
வலைப்பேச்சு தெரிவித்துள்ள இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் யாரவது சொந்த பைக்கை பஞ்சர் ஆனது என்று நிறுத்திவிட்டு போவார்களா? என கலாய்த்து வருகிறார்கள். மேலும், நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.