நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி இளையராஜா தனது -79 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி, இன்று சென்னை போயஸ்கார்டன் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு இளையராஜா சென்று ரஜினியை சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியுள்ளார்களாம். பின்னர் இளையராஜா வீட்டிற்கு செல்லும்போது ரஜினி ஏதும் விஷயம் இருக்குதா என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு இளையராஜா ” ஜூன் 2 ம் தேதி எனது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது அதான் அங்கே செல்கிறேன்” என்று கூறியுள்ளார். உடனே ரஜினி தானும் வருவதாக கூறியுள்ளார். இளையராஜாவும் ரஜினியை காரில் அழைத்து சென்று விட்டார்.
ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்ட ரஜினிகாந்த், இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…