கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை மிஸ் பண்ணிடீங்க என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
கவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஸ்டார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தினை பியார் பிரேமா காதல் படத்தினை இயக்கி இருந்த இளன் தான் இயக்கி இருந்தார். முதன் முதலாக ஸ்டார் படத்தையும், இளன் ஹரிஷ் கல்யாண் வைத்து தான் எடுக்க திட்டமிட்டு இருந்தார். படத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாணும் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வந்தார். அதற்கான போஸ்டர்கள் கூட வெளியாகியும் இருந்தது. பியார் பிரேமா காதல் கூட்டணி மீண்டும் இணைந்த காரணத்தால் இந்த படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புகளும் இருந்தது.
பிறகு திடீரென ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு நின்று படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாணும் விலகினார். படத்தில் இருந்து விலகிய காரணத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து, படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு பதிலாக கவின் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கவின் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான பிறகும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமானது என்றே சொல்லலாம். படத்தில் கவினுக்கு ஏற்றது போல கதையை மற்றும் மாற்றி இளன் படமாக இயக்கினார்.
படத்தின் ட்ரைலர் எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 10-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், படம் மக்களை கவர்ந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையப்போகிறது என்றும், கண்டிப்பாக கவின் சினிமா கேரியரில் ஒரு முக்கிய படம் என்றும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு பலரும் படத்தை தவறவிட்ட ஹரிஷ் கல்யாண் நீங்கள் ரொம்ப பெரிய படத்தை தவறவிட்டுவிட்டீர்கள் என்று கூறி வருகிறார்கள். ஒரு வேளை படத்தில் நீங்கள் நடித்திருந்தீர்கள் என்றால் இந்த வரவேற்பு எல்லாம் உங்களுக்கு தான் கிடைத்து இருக்கும் என்று அவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.
மேலும், ஸ்டார் படத்தில் நடிக்காததற்கு காரணம் குறித்து பேட்டி ஒன்றில் ஹரிஷ் கல்யாண் இதற்கு விளக்கமும் அளித்து இருந்தார். அந்த பேட்டியில் ஹரிஷ் கல்யாண் கூறியதாவது ” ஸ்டார் படத்தில் முதலில் நான் நடித்து வந்தேன். ஆனால், நிறைய விஷயங்கள் தாமதமான காரணத்தால் படத்தில் நிறைய விஷயம் மாற்றபட்டது. இப்போது அதில் வேறு ஹீரோ நடித்துள்ளார் எனவே இதனை பற்றி பேசி பெருசு பண்ண விரும்பவில்லை” என கூறியிருந்தார்
அதைப்போலவே இயக்குனர் இளன் கூட ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் போது படத்தில் ஹரிஷ் கல்யாண் விலகியது குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் ” படம் அவரை வைத்து எடுக்கும்போது கொரோனா நேரம் எனவே ஊரடங்கு வந்தது. அடுத்ததாக எடுக்கும்போது கொஞ்ஞம் தாமதமானது. இதன் காரணமாக தான் அவரால் நடிக்க முடியவில்லை மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை. இரண்டு பேரும் புரிந்துகொண்டோம் அவர் விலகினார் அதன் பிறகு கவின் நடித்தார்” எனவும் இளன் கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…