தனுஷ் அணிந்திருக்கும் இந்த ஷூவின் விலை எவ்வளவு தெரியுமா..? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்..
நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது, இயக்குனர் அருண் மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- ஷூட்டிங் எல்லாம் கிடையாது… பொன்னியின் செல்வன் குழுவிடம் இருந்து வந்த சூப்பர் அப்டேட்…
இந்த படத்திற்காக தான் தனுஷ் நீளமான முடி மற்றும் தாடியுடன் இருக்கிறார். இதனையடுத்து, படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் தனுஷுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாது வழக்கம். அந்த வகையில், நேற்று தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலானது.
இந்த புகைப்படத்தில் தனுஷ் (Balenciaga Shoes) வகையை சேர்ந்த ஷூவை அணிந்துள்ளார். பார்ப்பதற்கு பளபளப்பாக ரிச்சான லுக்கில் இருக்கும் அதனுடைய விலை தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில், அந்த ஷூ-வின் விலை 70,000. இந்த தகவலை இதனை பார்த்த நெட்டிசன்கள் 70,ஆயிரத்திற்கு ஷூவா..? அந்த பணம் எங்ககிட்ட இருந்த ஷூ கடையே வைத்திருப்போம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
#CaptainMiller – #Dhanush Latest pic..⭐
Balenciaga Shoes ???? 70k..!! pic.twitter.com/gt40MTUv82
— CineBloopers (@CineBloopers) November 16, 2022