குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் அணிந்திருந்த சட்டை ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது. பலரும் அதேபோலவே சிங்கம் புகைப்படம் கொண்ட சட்டைகளை வாங்கி மகிழ்ந்தனர். அப்படி தான் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அணிந்திருக்கும் சட்டை பலரையும் ஈர்த்துள்ளது.
அந்த சட்டை எங்கு கிடைக்கும்? எவ்வளவு ரூபாய் இருக்கும் என தேடியதோடு குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு அந்த சட்டையை அணிந்து வரவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்படி காத்திருப்பவர்களுக்கு தலையில் குண்டை தூக்கிப்போடும் அளவுக்கு அந்த சட்டையுடன் விலை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. பலரும் நினைத்தபடி அந்த சட்டை ரூ.600 அல்லது 1000 இல்லை ரூ. 1,80,000.00 (ஒரு லட்சத்து 80 ஆயிரம்) என தெரிய வந்துள்ளது.
இந்த சட்டையை விலையுயர்ந்த சட்டைகளை ரெடி செய்து கொடுக்கும் Moschino Couture தான் தயாரித்துள்ளது. சட்டையை சுற்றி பல்வேறு கலர்கள் இருப்பதால் பார்த்தவுடன் கவரும் அளவுக்கு ஒரு அமைப்பை ட்ரஸ் கொண்டு இருக்கிறது. இருப்பினும் விலை அதிகமாக இருக்கும் நிலையில், விலையை கேட்ட பலரும் என்னது அஜித் டிரஸ் இவ்வளவு விலையா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும், குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியானதில் இருந்து இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் டீசரை பற்றி தான் பேசி வருகிறார்கள். டீசரும் வெளியான 24 மணி நேரம் அதாவது 1 நாளில் சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்ன சாதனை என்றால் தமிழ் சினிமாவில் வெளியான டீசரில் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.