அடேங்கப்பா…மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி விலை எவ்வளவு தெரியுமா?

Manjummel Boys OTT Rights: இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை தாண்டி, தமிழில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடிக்கு விற்க முன் வந்ததாகவும், அதனை முதலில் ரூ.10 கோடிக்கு தான் வாங்குவதற்கு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது. ஒரு வழியாக பேச்சு வார்த்தைகள் சுமுமாக முடிவடைந்து ரூ.20 கோடிக்கு ஒகே செய்துள்ளதாம் பிரபல ஓடிடி நிறுவனம்.

அது வேற யாருமல்ல, முன்னணி நிறுவனமான ஹாட்ஸ்டார் தான் வாங்கியுள்ளது. அதன்படி, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீசாகிறது. இதற்கிடையில், இப்படம் ஏப்ரல் 6ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025