மறைத்த நடிகர் சேசு கடைசியாக நடித்த படம் எது தெரியுமா ?

Published by
அகில் R

Actor Seshu : விஜய் டிவியின் காமெடி தொடரான ​​லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு, தற்போது 60-வது வயதில் காலமானார். இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன. இதன் விளைவாக அவருக்கு அளித்த சிகிச்சை எதுவும் பலன் கொடுக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார். விஜய் டிவி யின் புகழ் பெற்ற தொடரான லொள்ளு சபா மூலம் பிரபலமாக திகழ்ந்தார். அதன் மூலம் அவர் தனது சினிமா வாய்ப்புகளையும் தக்க வைத்து கொண்டார்.

இவர், 2002 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டும் இருந்தார். இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

குறிப்பாக இவர் நடித்த A1 திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைகளின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு இவர் கடைசியாக சந்தானம் நடித்து வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் கடைசியாக 2020இல் தனது மகன் அபிலாஷ் இயக்கிய ‘அரோரா’ என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்திருந்தார். தற்போது, இவரது மரணத்திற்கு தமிழ் சினிமா பிரபலன்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

26 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

55 minutes ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

2 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

9 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

13 hours ago