மறைத்த நடிகர் சேசு கடைசியாக நடித்த படம் எது தெரியுமா ?
![Sheshu Post [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/03/Sheshu-Post-file-image.webp)
Actor Seshu : விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு, தற்போது 60-வது வயதில் காலமானார். இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன. இதன் விளைவாக அவருக்கு அளித்த சிகிச்சை எதுவும் பலன் கொடுக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார். விஜய் டிவி யின் புகழ் பெற்ற தொடரான லொள்ளு சபா மூலம் பிரபலமாக திகழ்ந்தார். அதன் மூலம் அவர் தனது சினிமா வாய்ப்புகளையும் தக்க வைத்து கொண்டார்.
இவர், 2002 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டும் இருந்தார். இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
குறிப்பாக இவர் நடித்த A1 திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைகளின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு இவர் கடைசியாக சந்தானம் நடித்து வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் கடைசியாக 2020இல் தனது மகன் அபிலாஷ் இயக்கிய ‘அரோரா’ என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்திருந்தார். தற்போது, இவரது மரணத்திற்கு தமிழ் சினிமா பிரபலன்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025