அடேங்கப்பா! சுந்தர் சி படத்தில் நடிக்க ஜீவா கேட்ட பெரிய சம்பளம்…எம்புட்டு தெரியுமா?

jivaa and Sundar C

ஜீவா : நடிகர் ஜீவா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் மேதாவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் என்றால் ஜிப்ஸி படத்தினை கூறலாம்.

ஏனென்றால், ஜிப்ஸி படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் கூட விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் பேசப்படவில்லை. இப்படியான சூழலில், ஜீவா தான் நடிக்கவுள்ள அடுத்த படங்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சமீபத்தில் அவருக்கு சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாம். அப்போது தயாரிப்பாளரிடம் ஜீவா தனக்கு சம்பளமாக 4.5 கோடி வேண்டும் என்று கேட்டாராம். இவ்வளவு கோடி சம்பளம் கேட்டவுடன் அதிர்ந்து போன அந்த தயாரிப்பாளர் யோசித்து கொண்டு இருக்கிறாராம்.

அதைப்போல, இயக்குனர் சுந்தர் சி தற்போது கலகலப்பு 3 படத்தினை மிர்ச்சி சிவா, விமல் ஆகியோரை வைத்து எடுத்து வரும் நிலையில், அந்த படத்திலும் முதலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை ஜீவாவிடம் தான் நடந்ததாம். ஆனால், ஜீவா 4 கோடி சம்பளம் கேட்ட நிலையில், அதிர்ந்து போன அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் மிர்ச்சி சிவா, விமல்  ஆகியோரிடம் பேசி அவரில் ஒருவரை ஜீவா நடிக்க இருந்த கதாபாத்தியத்திற்கு  ஓகே செய்துவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்