leo Kerala [File Image]
நடிகர் விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் நேற்று (அக்டோபர் 19) திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படம் இப்போது முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக மாறியுள்ளது.
மேலும், இந்த படம் உலக முழுவதும் முதல் நாளில் ரூ.135 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் படம் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்ததுள்ளது.
அந்த வகையில், கேரளா மாநிலத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கேரள விஜய் ரசிகர்கள் நேற்று தாறுமாறாக கொண்டாடி தீர்த்தனர். படம் வெளியாவதற்கு முன்னதாகவும், கார் மற்றும் பைக் பேரணி நடத்தி படத்திற்கு பெரிய விளம்பரம் செய்தனர்.
LEO Review: சிங்கம் கர்ஜித்ததா, பதுங்கியதா? லோகேஷ் போட்ட கணக்கு என்னாச்சு? லியோ திரை விமர்சனம்…
தமிழ்நாட்டை போல், பாதிக்கு பாதி ரசிகர்கள் கூட்டம் கேரளாவில் விஜய்க்கு உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் மட்டும் லியோ திரைப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் மலையாள சினிமா நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மாபெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எஃப்- 2 திரைப்படம் ரூ.7.25 கோடி தான் என கூறப்படுகிறது. அது போல், ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ரூ. 5.5 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
லியோ படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக, கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே படம் வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து எந்தெந்த படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…