ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் குட் நைட் திரைப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். மணிகண்டனின் முந்தைய வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவ்வர் படத்தையும் தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ படத்துடன் மோதியுள்ளது.
Lover Review: காதலில் வென்றாரா மணிகண்டன்.? “லவ்வர்” விமர்சனம் இதோ!
நேற்று திரையரங்கள் வெளிவந்த இப்படம், டாக்சிக் காதலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தப் படம் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்தப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ.1 கோடி வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படத்துடன் மோதிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் லவ்வர் படத்திற்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படுத்தவில்லை என தெரிகிறது. முதல் நாளில் ரூ.1 கோடி வசூல் செய்திருப்பது பெரியதாக பார்க்கப்படுகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…