இயக்குநர் ஷங்கரை கண்கலங்க வைத்த ‘டிராகன்’ படத்தின் வசூல் செய்தது தெரியுமா?

அஸ்வத் மாரிமுத்து இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்துள்ள 'டிராகன்' திரைப்படத்தை பாராட்டி இயக்குனர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.

Shankar - dragon

சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டிராகன்’ வெளியானதிலிருந்து, இந்தப் படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் மிகுந்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்திய மதிப்பீட்டின் படி, முதல் நாளில் ரூ 6.5 கோடியும் 2வது நாளில் ரூ. 10.8 கோடியும், 3வது நாளில் ரூ.11.5 கோடி என இந்தப் படம் மொத்தமாக ரூ.28.80 கோடி வசூல் செய்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் வெற்றிக்காக இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இப்படத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கரும் இணைந்துள்ளனர். இப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அவர் தனது பதிவில், “டிராகன் போன்ற அழகான படத்தை கொடுத்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு HATS OFF. அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு முழுமையான பயணத்தைக் கொண்டுள்ளன.

பிரதீப் ரங்கநாதன் தான் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு கலைஞர் என்பதை மீண்டும் நமக்குக் காட்டினார். இயக்குனர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் உங்கள் இதயத்தில் நிலைத்திருக்கும் நடிப்பை வழங்கினர். படத்தின் கடைசி 20 நிமிடங்களில் கண்ணீர் வந்துவிட்டது” என்று பாராட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்