தங்கலான் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தங்கலான் : நடிகர் விக்ரம் ரசிகர்கள் அடுத்ததாக ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் தங்கலான் படத்தை கூறலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி, டேனியல் கால்டாகிரோன், முத்துக்குமார், ப்ரீத்தி கரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை 100 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டிரைலர் என வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது.
இந்த தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரம் சம்பளமாக 19 கோடி வரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கலான் படம் பெரிய அளவில் ஹிட்டானால் அடுத்ததாக அவர் தான் நடிக்கவுள்ள படங்களுக்கு அதிகமாக சம்பளம் வாங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025