கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 22-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?
இந்நிலையில், இந்த படத்தின் நடிகர்களின் சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் நடிகர் பிரபாஸுக்கு மட்டும் சம்பளமாக ரூ.100 கோடி மற்றும் லாபத்தில் 10% பங்கு என கூறப்படுகிறது. மேலும், இயக்குனர் பிரசாந்த் நீல் ரூ.50 கோடியும், ஸ்ருதிஹாசன் ரூ.8 கோடியும், பிருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோருக்கு தலா ரூ.4 கோடியும் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…