விடுதலை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Default Image

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

viduthalai soori and vjs
viduthalai soori and vjs [Image Source : Twitter]

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

VIDUTHALAI 2
VIDUTHALAI 2 [Image Source : Twitter]

அதன்படி, விடுதலை திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Viduthalai
Viduthalai [Image Source: Twitter ]

மேலும், இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கிய அணைத்து படங்களில் வெற்றிபெற்ற நிலையில், விடுதலை படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு வைத்து பார்க்கும்போது இந்த படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது என்றே கூறலாம்.  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்