இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் “பூமணியின் வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு தழுவி எடுத்திருந்தார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து. இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகிய நான்காவது திரைப்படம் இதுவாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த தமிழ் திரைப்படம் அசுரன் என்றும், சிறந்த நடிகர் தனுஷ் என்றும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இப்படம் 2021ல் தெலுங்கில் ‘நரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்திக்கொள்ளும் சாதியவன்மத்தை அசுரன் படம் எடுத்துரைத்தது. தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இந்த திரைப்படம் கடந்த 2019 அக்டோபர் 4 அன்று திரையரங்குகளில் வெளியானது. இன்றயை தேதியில் அப்போது வெளியான ‘அசுரன்’ படம் இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனுஷை வைத்து தொடர் வெற்றிகளை குவித்த வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
அந்த வகையில், அசுரன் படத்தின் கிளைமாக்ஸில், “நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க…ரூபா இருந்தா புடிங்கிக்கிடுவானுங்க…ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம் என்ற டயலாக் இன்றும் நின்று பேசக்கூடியதாக அமைந்துள்ளது. இப்படி படத்தில் ஒவ்வொரு காட்சிகளை பார்த்து பார்த்து செய்திருப்பார் இயக்குனர் வெற்றிமாறன்.
சுமார், ரூ.32 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16 கோடி வசூலித்தது. தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, 10 நாட்களில் ரூ.60 கொடியவ் தாண்டியது. சொன்னபோனால, இப்படம் அப்போவே உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…