ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் நடித்த “லியோ” திரைப்படம் நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
வசூல் ரீதியாக படம் வெளியான முதல் நாளிலே 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு யார் எல்லாம் எவ்வளவு வாங்கினார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
லியோ படத்தின் சம்பள விவரம்
1.விஜய்
லியோ படத்தில் நடிக்க நடிகர் விஜய் 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இதற்கு முன்பு ஒரு படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் லியோ படத்திற்காக 130 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் 130 கோடி சம்பளம் வாங்கியதை லியோ படத்தில் வசனம் எழுதிய ரத்னகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
2.த்ரிஷா
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் த்ரிஷா கமிட் ஆனார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அவர் மொத்தமாக 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
3.சஞ்சய் தத்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் நடிப்பதற்கு முன்பு கேஜிஎப் 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு சம்பளம் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
4.அர்ஜுன்
வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர் நடிகர் அர்ஜுன். இவர் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அர்ஜுன் சம்பளமாக 2 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம்.
5. பிரியா ஆனந்த்
பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த நடிகை ப்ரியா ஆனந்திற்கு ஜாக்பார்ட் அடிக்கும் வகையில், லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளமாக 1 கோடி 50 லட்சம் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
6. அனிருத்
சமீபகாலமாக அனிருத் இசையில் வெளியாகும் படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி அவருடைய இசையும் பேசப்பட்டு வருகிறது. அதைப்போலவே இந்த லியோ படத்திலும் அவருடைய இசை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக சம்பளமாக அனிருத் 10 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…