நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ட்ரீம் வாரியஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படம் தமிழகத்தில் மட்டும் 250 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. பீஸ்ட் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் வெளியாகிறது என்பதால் கேஜிஎப் 250 திரையரங்குகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…