அண்ணாச்சியின் “தி லெஜெண்ட்” எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா.? ஆடிப்போன தமிழ் திரையுலகம்.!
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த திரைப்படத்தில்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த அருள் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ் ஆக தயாராக உள்ளது படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் இந்த படம் கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் வெளியாகிறதாம். ஒரு அறிமுக ஹீரோவின் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது இதுவே முதன் முறை. 600 திரையரங்குகளில் அண்ணாச்சியின் படம் வெளியாகவுள்ளதால் தமிழ் சினிமாவே ஆடிபோய்வுள்ளது.