மனுஷன் பாவம்யா! ஒரு நாளைக்கு அஜித் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார் தெரியுமா?

ajith kumar

சென்னை : நடிகர் அஜித்குமார் எப்போதுமே மிகவும் கடினமாக உழைக்க கூடிய ஒரு நடிகர் என்பது அவருடைய ரசிகர்களுக்கு சொல்லாமலே தெரியும். படங்களில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளில் இருந்து  டூப் போடாமல் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக கூட மிகவும் ஆபத்தான கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடித்த போது கார் கவிழ்ந்து விழுந்து அவருக்கு லேசாக காயமும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக வியக்க வைக்கும் ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அஜித்குமார் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 21-மணி நேரம் படப்பிடிப்புக்காக நேரத்தை செலவு செய்து கடினமாக வேலை செய்து வருகிறாராம்.

அதற்கு முக்கிய காரணமே அஜித் தற்போது  விடாமுயற்சி, மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் மும்மரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு படங்களுக்கும் கால்ஷீட் தொடர்ச்சியாக கொடுத்த காரணத்தால் தொடர்ச்சியாக அவர் நடிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அஜித் தொடர்ச்சியாக மாறி மாறி விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடித்து வந்தாலும் கூட சரியான ஓய்வு இல்லாமல் அவர் 21 மணி நேரம் நடித்து வருவது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வியப்பான தகவலை சுரேஷ் சந்திரா  சென்னையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அஜித்குமார் சார் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தினமும் 21 மணி நேரம் உழைக்கிறார், விடாமுயர்ச்சி படத்துக்கு இணையாக குட்பேட்அக்லி படப்பிடிப்பு நடந்து வருகிறது.  அவர் தன்னுடைய அர்ப்பணிப்புகளை முடிக்க விரும்புவதால் அதிகாலை 2 மணியளவில் தூங்கச் சென்று காலை 7 மணிக்கு செட்டிற்கு வருகிறார்.

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடையும், அதன் பிறகு அஜித்குமார் சார் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு  தனது அடுத்த படத்தை மே மாதம் தொடங்குகிறார்” எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த அவருடைய ரசிகர்கள் அஜித்துக்கு சினிமா மீது இவ்வளவு அன்பா? என பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்