5YearsOfSeemaraja : பிளாப் ஆன சீமராஜா உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

5YearsOfSeemaraja

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2018 ஆண்டு வெளியான  திரைப்படம் “சீமராஜா”. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருப்பார். சூரி, கீர்த்தி சுரேஷ், மொட்ட ராஜேந்திரன், நெப்போலியன், பாலசுப்ரமணியம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேரை பெற்றது. ஆனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல இந்த திரைப்படம் இல்லாத காரணத்தால் விமர்சன ரீதியாக தோல்வி ஆனது.

இந்த படம்  தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே காமெடி கதையை மையமாக வைத்து எடுத்து வேண்டும் என்ற முயற்சியில் காமெடியே இல்லாமல் எடுத்து தான். காமெடியையும் தாண்டி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஆக்சன் காட்சிகளும் அவருக்கு செட் ஆகாதபடி இருந்ததால் படம் தோல்வி அடைந்தது.

40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பட்ஜெட்டை தாண்டி படம் வசூலை குவித்து இருந்தாலும் கூட படம் இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தால் இன்னுமே படம் அதிகமாக வசூலா குவித்து இருக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட்டை தாண்டி சில கோடிகள் மட்டும் தான் கிடைத்ததால் படம் தோல்வி படம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை கடந்த நிலையில், படம் பிடித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படத்தை பற்றி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 21-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்