தி லெஜண்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா.?
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவா நடித்துள்ளது “தி லெஜண்ட்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரட்டை இயக்குநர்களான ஜெர்ரி&ஜேடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரபு, நாசர், விவேக், யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா, என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த பலரும், படம் தங்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை, என எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அருள் அண்ணாச்சிக்கு இது முதல் படம் என்பதால், அருள் அண்ணாச்சிக்கு இது முதல் படம் என்பதால் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக இல்லை என்றே வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.
40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 2 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வாரம் முடிவில் தான் தி லெஜண்ட் படத்துக்கு வரும் வசூலை பொறுத்துத்தான் அதன் வெற்றித் தோல்வி முடிவாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.