Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி நடிகர் விஷாலை வைத்து ரத்னம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், முரளி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். படத்தின் டிரைலர் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இதனையடுத்து, இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் அருமையாக இருப்பதாகவும் கதையை பொறுத்தவரையில் பெரிய அளவில் ஈர்க்கும் அளவிற்கு இல்லை என்று படத்தை பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூல் ரீதியாகவும் முதல் நாளில் குறைவான வசூல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 2.50 கோடி வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 3.57 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னுமே அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…