தமிழகத்தில் “வீட்ல விசேஷம்” எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் “வீட்ல விசேஷம்”. இந்த படம் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான “பதாய் ஹோ” படத்தின் தமிழ் ரீமேக்.
இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஊர்வசி, நடிகர்கள் சத்யராஜ், யோகிபாபு, மயில்சாமி, அபர்ணா பாலமுரளி, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இப்படத்தை வலிமை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த மக்கள் ஓரளவு நல்ல கருத்துக்களை கூறிவருகிறார்கள். படத்தின் பாதி வெற்றிக்கு காரணமே ஆர்.ஜே.பாலாஜி செய்த ப்ரோமோஷன் என்றே கூறலாம். சீரியல் வரை சென்று ப்ரோமோஷன் செய்து கலக்கிவிட்டார்.
இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் 6 கோடி வசூல் செய்துள்ளதாம். படத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைப்பதால் வரும் நாட்களில் படம் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.