ஜவான் படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா.?

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் “ஜவான்”  திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் OTT உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதைபோல், ஹாட்ஸ்டார் நிறுவனம் “விக்ரம்” திரைப்படத்தை ரூ.120 கோடிக்கு வாங்கியிருந்தாகவும் ஒரு தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago