ஜவான் படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா.?
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் “ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் OTT உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதைபோல், ஹாட்ஸ்டார் நிறுவனம் “விக்ரம்” திரைப்படத்தை ரூ.120 கோடிக்கு வாங்கியிருந்தாகவும் ஒரு தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.