புஷ்பா 2 படத்துக்காக ஃபஹத் ஃபாசில் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஃபஹத் ஃபாசில் : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கடைசி கால் மணி நேர வில்லத்தனத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஃபஹத் ஃபாசில் என்று சொல்லலாம்.
முதல் பாகத்தை போல, ஃபஹத் ஃபாசில் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைய உள்ள நிலையில், சரியான தேதி குறிப்பிடாததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் மொத்தமாக, சம்பளம் வாங்கவில்லயாம். ஒரு நாளுக்கு கணக்குப்படி பார்த்து சம்பளம் வாங்கி இருக்கிறாராம். புஷ்பா 2 படத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் ஒரு நாளைக்கு 12 லட்சம் வாங்கினாராம்.
அது மட்டுமின்றி, பல படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் தன்னுடைய கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்று கூறி மேலும் 2 லட்சம் கேட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நாளைக்கு 12 லட்சம் சம்பளமா? என மிகவும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025