லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆன் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் படங்கள் வெளியானது என்றால் அது சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் லியோ திரைப்படமும் சர்ச்சைகள் ஏற்பட்டு வெளியாகிறது. ஏனென்றால் படத்தில் விஜய் கெட்ட வார்த்தையில் பேசியது தான்.
விஜய் பேசிய கெட்டவார்த்தைகள் மற்றும் படத்தில் வரும் கெட்டவார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டு தான் திரையரங்குகளில் வெளியிடபடும். ஆனால், படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டது என்பதால் விஜய் பேசிய ஒரு கெட்டவார்த்தை ‘மியூட்’ செய்யவில்லை. எனவே விஜய் கெட்டவார்த்தை பேசியதை வைத்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கே.ராஜன். சமீபத்தில் விஜய் லியோ படத்தில் பேசியுள்ள அந்த கெட்டவார்த்தை பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கெட்டவார்த்தைகள் பேசுவது என்பது மிகவும் தவறு கேடுகெட்டவனிலும் கேவலமானவர்கள் தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள். நேருக்கு நேர் பேசிக்கலாம் அதுவும் இப்போது குறைந்துவிட்டது. முன்பு தான் அப்படியெல்லாம் பேசுவார்கள்.
இப்போது படிப்பு அதிகமாகி விட்ட காரணத்தால் அப்படி பேசுவது யாரும் இல்லை. ஆனால், சினிமாவில் அப்படி இல்லை பெரிய ஹீரோ அந்த மாதிரி சொல்லும்போது அது மக்களை போய் சேர்ந்தால் எப்படி சரியாக இருக்கும்? எல்லா குடும்பங்களும் படம் பார்க்கிறது. நாம் சொல்லும் வார்த்தையை வேறு யாரவது சொன்னால் சரியாகவா இருக்கும்? அதுவும் அரசியலுக்கு வர போவதாக இளைஞர்கள் நம்பி கொண்டு இருக்கும் ஒரு ஹீரோ இப்படி பேசலாமா? இது மிகவும் தவறு.
படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் அருமையான இயக்குனர் நான் அதில் எல்லாம் குறையே சொல்ல மாட்டேன். அவர் இன்னும் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். ஆனால், இப்படி கேவலமான வார்த்தைகளை படத்தில் வைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக வாழ்க்கை சறுக்கிடும் தம்பி. இது தமிழ்நாடு எனவே, தயவு செய்து அந்த மாதிரி கெட்டவார்த்தைகள் வைக்கவேண்டாம்.
கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு கெட்டவார்த்தை பேசுவீர்களா? அப்படி பேசினால் அது இளைஞர்கள் மனதில் பொய் பதிந்தால் என்ன செய்வது” என மிகவும் காட்டத்துடன் பேசியுள்ளார். மேலும், இந்த வார்த்தை பேசும்போது விஜய் மிகவும் தயங்கி கண்டிப்பாக பேசணுமா?என லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு லோகேஷ் கண்டிப்பாக பேசுங்கள் என்று கூற அதன் காரணமாக தான் விஜய் பேசியுள்ளார். இதற்கான முழு காரணம் தான் மட்டும் தான் எனவும் லோகேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…