கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்ங்க – பிரியங்கா சோப்ரா
கொரோனா என்ற உயிர்கொல்லி நோயானது முதலில், சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்த நோயின் தாக்கத்தால், தொடர்ந்து உயியிரிழப்புகள் ஏற்பட்டு வருகிற நிலையில், இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை.
இதனையடுத்து, பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அவரது இணைய பக்கத்தில், வணக்கத்திற்கு மாறுங்க என கைகூப்பியவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க இது ஒரு வழி என கூறியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.