சென்னை : அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிகில் நாயர் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்திற்கு பிறகு அஜித் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை என்பதால் விடாமுயற்சி படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, த்ரிஷா, அர்ஜுன், நிகில் நாயர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை அக்டோபர் மாதம் வெளியிடபடக்குழு திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையில், அடிக்கடி படத்தில் இருந்து அப்டேட்டுகளை படக்குழு வாரி வழங்கி வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக படத்தில் நடிக்கும் பிரபலங்களுடைய போஸ்டர்களை படக்குழு வெளியீட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிகில் நாயர் தோற்றம் குறித்த போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டர் வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியான போஸ்டர்-ஆ எனவும், ‘இதோ உங்களுக்காக அசர்பைசான் ரோட்டில் இருந்து என்றும், இனிமே அப்டேட் வேண்டாம் ஆள விடுங்க டா சாமி என்பது போலவும் கூறி வருகிறார்கள். மேலும், படத்திலிருந்து அடுத்த அப்டேட்டாக ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…