ஓட்டைப் போடாதீர்கள் என ட்விட்டரில் பதிவிட்ட பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் ,நடிகராகவும் உள்ளார்.இவர் தமிழில் சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
நடிகர் பார்த்திபன் பேசக்கூடிய விசயங்கள் சிந்திக்கும் படியாக இருக்கும்.சினிமாவில் மாற்றுமன்றி சமூகத்தின் மீது அக்கறையோடு பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது ஓட்டைப் போடாதீர்கள் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஓட்டைப் போடாதீர்கள்
ஓட்டைப் போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப் போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப் போடாதீர்கள்— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 16, 2019