டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சுருதி ராமசந்திரன், சாருஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹர் பெற்றுள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிக்க கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறுகையில், நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரே கதை இரண்டு முறை சொல்லப்படும்போது, அதில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்றும், காட்சிகளில் இருந்து எல்லாமே எனக்கு தெரிந்த விஷயம் என்பதால், அதில் ஆறுமாதம் செலவழிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …