2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 10 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான ராஜூமுருகன் இயக்கி இருக்கிறார். படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜப்பான் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இரண்டாவது பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படமும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனரான கார்த்தி என்பவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இறுக்கப்பற்று படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுக்கு மார்க்கெட் உயர்ந்திருக்கும் நிலையில், இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படமும் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வழக்கமாக தீபாவளியை முன்னிட்டு படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று இந்த முறை 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ள காரணத்தால் மக்கள் அனைவரும் இந்த 3 படங்களையும் பார்த்து தீபாவளியை கொண்டாடலாம் என உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…