தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான லப்பர் பந்து திரைப்படம் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகிறது.
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை பார்க்க ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது என்று சொல்லலாம்.
அப்படி காத்திருந்ததற்கு முக்கியமான காரணமே படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சிக்ஸர் விளாசியது தான். படத்தின் கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எனத் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
எனவே இப்படிப்பட்ட அருமையான திரைப்படத்தைத் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க முடியாமல் இருந்த ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அப்படிக் காத்திருந்தவர்களுக்காகவே படம் நாளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எனவே இந்த தீபாவளியை ரப்பர் பந்து படம் பார்த்துக் கொண்டாடிக் கொள்ளுங்கள்.
மேலும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அருமையாக இருந்த காரணத்தினால் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வசூல் ரீதியாக 36 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து தயாரிப்பாளருக்குப் பெரிய லாபத்தையும் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Streaming from Tonight!
Blockbuster #LubberPandhu ???? pic.twitter.com/kKZLbHU2aQ
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 30, 2024