தீபாவளி பண்டிகை என்றாலே பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படம் மற்றும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய இரண்டு திரைப்படமும் ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே தீபாவளி பாண்டியை முன்னிட்டு 2 படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், மேலும் ஒரு திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் துருவநட்சத்திரம் படம் தான்.
துருவநட்சத்திரம் படம் ஏற்கனவே இந்த ஆண்டு ஜீலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி செல்வதாக கூறப்பட்டது. இதனையடுத்து, படத்தின் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிவடையும் சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக துருவநட்சத்திரம் திரைப்படத்தை வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட இந்த தகவல் உறுதியாகிவிட்டதாகவும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே, தீபாவளிக்கு இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
அந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது அதிலும் குறிப்பாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதைப்போல ஜப்பான் படத்தின் டீசரும் வித்தியாசமாக இருந்த காரணத்தால் அதுவும் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் மீது பெரிய எதிர்பாரை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த பெரிய போட்டியில் தற்போது சீயான் விக்ரமும் தன்னுடைய துருவநட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். எனவே மூன்று படங்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகவுள்ள காரணத்தால் இந்த படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்து தீபாவளி வின்னராக ஆகா போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…