சரவெடியாய் வெடிக்க காத்திருக்கும் தீபாவளி திரைப்படங்கள்… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்.!

Default Image

வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை என்றாலே, ரஜினி, கமல், விஜய், அஜித் என திரையுலகில் இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.

ஆனால், இந்த வருடம் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் முடியாததால் பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. தமிழில் சிவகார்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்களேன்- #CelebrityDiwali : நயன்தாரா முதல் புகழ் வரை….இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்.!

1. சர்தார் 

SardarTrailer
SardarTrailer [Image Source: Twitter]

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “சர்தார்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

2. பிரின்ஸ் 

Prince Sk
Prince Sk Movie [Image Source: Google]

தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சர்தார் படமும் அதே தினத்தில் வெளியாகவுள்ளது என்பதால் இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூலை செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3. ராம் சேது

Ram Setu Moive
Ram Setu Moive [Image Source: Google]

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் தயாராகி உள்ளராம் சேது இந்தி திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து தீபாவளி அன்று படக்குழு வெளியீடுகிறார்கள். ராமர் பாலம் பற்றிய கதையம்சம் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது.

4. தேங்க் காட்

Thank God Movie
Thank God Movie [Image Source: Google]

ஹிந்தியில் அஜய்தேவ்கான் நடித்துள்ள தேங்க் காட் திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5. மான்ஸ்டர்

Monster Movie
Monster Movie [Image Source: Google]

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான வைசாக் இயக்கியுள்ளார். படத்தை பார்க்க ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் ஆவலுடன் காத்துள்ளனர்.

6. படவெட்டு

Padavettu Movie
Padavettu Movie [Image Source: Google]

நிவின் பாலி நடிப்பில் அறிமுக இயக்குனர் லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் படவெட்டு திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு பல படங்கள் வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடிவிட்டு படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். எந்தெந்த படங்கள் எத்தனை கோடி வசூல் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்