ஆர்த்தியுடன் விவாகரத்து முடிவு! மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?
விவாகரத்து முடிவை தொடர்ந்த ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறி அங்கு அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருந்தார். இந்த முடிவு, எடுப்பதற்கு முன்பு இருவரும் யூடியூப் சேனல்களுக்கு, பேட்டி கொடுத்த போது இருவரும் ஒருவருக்கொருவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருந்தது.
இந்த சூழலில், அவர்களுடைய விவாகரத்து அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து, மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கங்களில் விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிடம் எதுவும் கேட்கவில்லை. இந்த முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவு எனக் கூறி குற்றம்சாட்டி இருந்தார்.
அதன்பிறகு, சென்னையிலிருந்து கோவாவுக்குச் சென்ற, ஜெயம் ரவி தன்னுடைய மனநிலையை மாற்றவேண்டும் என்பதற்காக மனதளவில், பாதிக்கப்பட்ட பலருக்கும் ஹீலிங் செய்து வரும் பாடகி கெனிஷாவை பார்க்கச் சென்று இருந்தார். இது, தவறுதலாக மாறி இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பது போலவும் தகவல்கள் பரவ காரணமாக அமைந்துவிட்டது.
பிறகு தங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை என இருவரும் விளக்கம் கொடுத்து இருந்தார்கள். அதன்பிறகு, ஜெயம் ரவி பேட்டியில் ஆர்த்தியும் அவருடைய குடும்பத்தினரும் தனக்கு ரொம்பவே வேதனை கொடுத்த விஷயங்கள் பற்றியும் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி, விவாகரத்து கிடைக்க எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, விவாகரத்து முடிவை தொடர்ந்து ஜெயம் ரவி சென்னையிலிருந்து முழுவதுமாக வெளியேறி மும்பைக்குக் குடியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, மும்பையில் அலுவலகம் ஒன்றையும் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடனும் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தை அவரிடம் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.