சூர்யா கூட NO லவ்…ஒன்லி தம்பி.! அக்கானு சொல்லி கஷ்டப்படுத்திட்டான் – டிஸ்கோ சாந்தி வருத்தம்
80-ஸ் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சி நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் டிஸ்கோ சாந்தி. அப்போது காலகட்டத்தில் டிஸ்கோ சாந்தியும் சில்க் சுமிதாவும் கவர்ச்சிக்கு பெயர் போனவர்கள்.
நடிகை டிஸ்கோ சாந்தி தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகரான ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரது மகள் அக்ஷரா ஸ்ரீஹரி நான்கு மாத குழந்தையாக இருந்தபோது உயிழந்துவிட்டார் நடிகர் ஸ்ரீஹரி.
அடிக்கடி, தனது கணவர் பற்றி மனம் உருகி பேசும் டிஸ்கோ சாந்தி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழ் நடிகர்களின் யாரெல்லாம் புடிக்கும் என்பதை பகிர்ந்து கொண்டார். அப்போது, இப்போதய இளம் நடிகர்களில் சூர்யாவை ரொம்ப புடிக்கும், அவரது கண்ணு அழகா இருக்கும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
ஆனால், ஒரு நாள் நடிகர் சூர்யா மறைந்த அவரது கணவர் ஸ்ரீஹரியிடம் அக்காவை கேட்டதாக சொல்லுங்க என்று சொன்னாராம். அதனை கேட்ட டிஸ்கோ சாந்தி அப்போதல இருந்து எனக்கு அவன் எனக்கு தம்பியா ஆகிட்டான். சூர்யா அக்கானு சொல்லி ஏன் மனச கஷ்டப்படுத்திட்டான், “அதுல இருந்து நோ லவ் ஒன்லி தம்பி” என்று ஜாலியாக சிரித்துக்கொண்டு பேசினார்.