சூப்பர் ஸ்டாரின் ‘குண்டூர் காரம்’ படக்குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.! தமனின் வைரல் ட்வீட்…

Guntur Kaaram team

இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் ‘குண்டூர் காரம்’ திரைப்படம் பல்வேறு வதந்திகளால் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. குண்டூர் காரம் படப்பிடிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

Guntur Kaaram
Guntur Kaaram [Image Source : youtube]

முன்னதாக, இப்படம் கிடப்பில் போடப்பட்டது என்ற வதந்திகளுக்குப் பிறகு, இப்பொது படத்தின் புதிய சர்ச்சை இசையமைப்பாளர் எஸ் தமன் மாற்றப்பட்டது என்பது தான். குண்டூர் காரம் படத்தில் இசையமைக்க இருந்த எஸ் தமனுக்கும் படக்குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Mahesh Babu and Guntur Kaaram team
Mahesh Babu and Guntur Kaaram team [Image Source : ndtv]

இந்நிலையில், வேறுபாடுகள் காரணமாக தமனுக்கு பதிலாக அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், பாடல்களை இசையமைப்பதிலும் வழங்குவதிலும் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahesh Babu and Guntur Kaaram team
Mahesh Babu and Guntur Kaaram team [Image Source : cnv3]

அதாவது, மகேஷ் பாபுவுக்கு  இந்த படத்தில் தமனை இசையமைக்க விரும்பவில்லை என்றும், ஆனால் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தான் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வதந்திகள் உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை.

Mahesh Babu and Guntur Kaaram team
Mahesh Babu and Guntur Kaaram team

அந்த வகையில், இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டரில், ‘தனது ஸ்டுடியோவிற்கு அருகில் மோர் கடை தொடங்குகிறேன். வயிற்று அழற்சி இருப்பவர்களுக்கு இலவசமாகவும் தருகிறேன். தயவுசெய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது’ என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.

இந்த வதந்திகளுக்கு மத்தியில், குண்டூர் காரத்தின் படப்பிடிப்பு ஜூன் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம, 2024 சங்கராந்திக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்